Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபைக் டாக்ஸிக்கு தடையா? ரேபிடோ இனி இல்லையா? - வெளிவந்த அதிரடி உத்தரவு!

    பைக் டாக்ஸிக்கு தடையா? ரேபிடோ இனி இல்லையா? – வெளிவந்த அதிரடி உத்தரவு!

    தில்லியில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் இயங்கும் பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    தலைநகர் தில்லியில் நிலவும் போக்குவரத்து நெரிசல் என்பது அங்கு வசிக்கும் பயணிக்கும் பலரின் பொறுமையையும் சோதிக்கும் ஒன்றாகவே  இருந்து வருகிறது. பல மணி நேர போக்குவரத்து நெரிசல் தில்லியில் சர்வ சாதாரணம் என்ற நிலமைக்கு தற்போது மக்கள் வந்துவிட்டனர். 

    ஆனால், போக்குவரத்து நெரிசலில் முடிந்தவரை எளிதாக கடக்க கார்களை விடவும், பைக்குகளையே பெரும்பாலானோர் சார்ந்திருக்கின்றனர். அதனால், தில்லியில் மற்ற நகர்ங்களை விடவும் அதிகளவில் பைக் டாக்ஸி சேவை புழக்கத்தில் இருந்தது. 

    ரேபிடோ, ஊபர், ஓலா உள்ளிட்ட செயலிகள் மூலம் இந்த டாக்ஸி செயலி இயங்குகிறது. இந்நிலையில், தில்லி போக்குவரத்து துறை பைக் சேவை டாக்ஸிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இந்த உத்தரவு பயணிகளையும், ஓட்டுநர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து தில்லி போக்குவரத்துத் துறை தெரிவிக்கையில், தனிநபர் பயன்பாட்டுக்காக பதிவு செய்யப்படும் வாகனங்கள் வணிக நோக்கத்தோடு பயன்படுத்தப்படுகின்றன. இது மோட்டார் வாகனச் சட்டம், 1988க்கு விரோதமானது என்று தெரிவித்துள்ளது. 

    மேலும், உத்தரவை மீறி பைக் டாக்ஸி சேவையை வழங்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும், இரண்டாவது முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ‘தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்’ – மு.க.ஸ்டாலின் பதிவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....