Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்உலக தாய்மொழி தினம்: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    உலக தாய்மொழி தினம்: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    உலக தாய்மொழி தினமான இன்று தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    இன்று உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியை பேசி வருகின்றனர். 

    இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    இன்று உலகத் தாய்மொழி நாள். தாய்மொழியை மதிக்காதவன், தாயை மதிக்காதவனுக்கு சமம் ஆவான். தமிழர்களாகிய நாம் தமிழ் மொழியிலேயே எழுதுவோம், உரையாடுவோம், பேசுவோம். குழந்தைகளை தமிழிலேயே படிக்க வைத்து, தாய்மொழியின் பெருமைகளைக் கற்றுத் தருவோம்!

    தமிழை வளர்க்க வேண்டிய, காக்க வேண்டிய கடமை அரசுக்கு தான் அதிகம். மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழைக் கட்டாய பயிற்றுமொழியாக்கவும், கட்டாய பாடமாக்கவும் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும். தமிழ் வாழ்க!  

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    தாய்மொழி தினம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

    மனிதரின் சிந்தனையைத் தீர்மானிப்பது அவரது தாய்மொழியேயாம். எத்தனை மொழிகளும் தத்தம் விருப்பத்தில் கற்றுக்கொள்ளலாம். அத்தனையிலும் அன்னை போல் இருப்பதால்தான் ஒரு மொழிக்கு மாத்திரம் தாய்மொழி என்று பேர். சிந்திப்பதை சொல்லில் வெளிப்படுத்தும் அனைவருக்கும் உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துகள்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    ஜாக்குவாரில் வந்த கொள்ளையர்கள்; திருடிய பணத்தில் ஏழைகளுக்கு நன்கொடை?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....