Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இம்ரான் கானின் முதல் மனைவிக்கு குறி; மனம் வெதும்பி போன ஜெமிமா கோல்ட்ஸ்மித்!

    இம்ரான் கானின் முதல் மனைவிக்கு குறி; மனம் வெதும்பி போன ஜெமிமா கோல்ட்ஸ்மித்!

    இம்ரான் கானுக்கு எதிராக என் வீட்டிற்கு முன்பு நடக்கும் போராட்டங்கள், எனக்கு 90களில் நடந்த கொடுமைகளை மீண்டும் நினைவூட்டுகிறது என்று இம்ரான் கானின் முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் தெரிவித்துள்ளார். 

    பாகிஸ்தானில் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதன் தாக்கமாக இம்ரான் கானின் முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித்திற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்பொழுது  ஜெமிமா கோல்ட்ஸ்மித் வீட்டிற்கு எதிராக வரும் ஏப்ரல் 17ஆம் தேதி போராட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு ஒரு போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் ஜெமிமாவின் குழந்தைகளின் படங்களும் இணைக்கப்பட்டிருந்தது. 

    இந்த போஸ்டர் குறித்து ஜெமிமா கோல்ட்ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தைகள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும், இது 90களில் அவர் லாகூரில் தங்கி இருந்தபோது தனக்கு ஏற்பட்ட கொடூர சம்பவங்களை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியிழந்த இம்ரான் கானின் விவகாரத்தில் வெளிப்படையாக ஜெமிமா கருத்து சொல்வது இதுவே முதல் முறை ஆகும். இம்ரான் கான் – ஜெமிமா கோல்ட்ஸ்மித் தம்பதியினர் 1995ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த இணையினருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இம்ரான் கான் ஜெமிமாவை விவாகரத்து செய்த பிறகு அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அதன்பிறகு நடந்த பலநேர்காணல்களில் தான் பாகிஸ்தானில் இருந்தபோது எவ்வாறு யூத எதிர்ப்புவாதிகளால் பாதிக்கப்பட்டேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த கொடுமையில் பத்தாண்டுகளுக்கும் மேல் தான் இருந்ததாக அவர் கூறியுள்ளார். 

    கடந்த ஆண்டு ஜெமிமா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு கசப்பான செய்தியை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகளின் தொடர்ச்சியான யூத எதிர்ப்பு வன்கொடுமைகள் மற்றும் தொடர்ச்சியான கொலை மிரட்டல்களுக்குப் பின்னர் நான் 2004ல் பாகிஸ்தானை விட்டு வெளியேறினேன், ஆனாலும் அந்த கொடுமையான சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது  என்று கூறியிருந்தார்.

    பாகிஸ்தானை விட்டு வெளியேறிய போதிலும் ஜெமிமா கோல்ட்ஸ்மித் பாகிஸ்தானின் அரசியல் மீது கருத்துகளை கூறி வந்தார். ஒருமுறை இம்ரான் கான், ஜெமிமா கோல்ஸ்மித்தின் சகோதரர் ஜாக் கோல்ட்ஸ்மித்தை ஆதரித்து இங்கிலாந்தில் பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    இம்ரான் சிறந்த மனிதர். ஊழல் செய்யாத அரசியல்வாதி. அவர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பார் என்று ஜாக் கோல்ட்ஸ்மித்தும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில்தான் ஜெமிமாவின் வீட்டுக்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....