Friday, March 31, 2023
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நான் ஒரு பிராண்ட் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்! - பீஸ்ட் வசூல் விவரம்!

    நான் ஒரு பிராண்ட் என மீண்டும் நிரூபித்த தளபதி விஜய்! – பீஸ்ட் வசூல் விவரம்!

    தளபதி விஜய் என்பது வெறுமனே ஒரு பெயர் அல்ல. அது ஒரு பிராண்ட் என்பது மீண்டும் நிரூபனமாகியுள்ளது. 

    கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான், பீஸ்ட். விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது திரையுலக ரசிகர்கள் பலரும் பீஸ்ட் திரைப்படத்திற்காக காத்திருந்தனர். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்ட திரைப்படமாகவே பீஸ்ட் இருந்து வந்தது.

    ஆம்! பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள், முன்னோட்டங்கள் என அனைத்தும் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை உயர்த்துவதாகவே இருந்தது. எதிர்ப்பார்ப்பும் உச்சத்தை அடைந்தது. இப்படியான உச்ச எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம், எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதே ஆகும்!

    பீஸ்ட் தொடர்ந்து பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களையும், சில நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. திரைப்படம் வெளியான முதலில் இருந்தே எதிர்மறையான கருத்துகள் வெளிவந்தன. இதனால் திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. 

    ஆனால், பீஸ்ட் திரைப்படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் தனது முதல் நாளிலேயே 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும், பீஸ்ட் திரைப்படமானது இரு நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன. 

    எதிர்மறை விமர்சனங்களால் துவண்டுப் போயிருந்த விஐய் ரசிகர்கள், பீஸ்ட் திரைப்படம் நிகழ்த்தும் வசூல் சாதனையால் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். 

    திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றும் இப்படியான வசூல் வேட்டையை நிகழ்த்த ஒரே காரணம், விஜய் எனும் பிராண்ட்தான் என்ற திரையரங்க உரிமையாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் கூறி வருகின்றன. 

    மேலும், பீஸ்ட் திரைப்படமானது இதற்கு முன் நிகழ்த்திய பல திரைப்படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. வசூல் சாதனைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    இதையும் படிங்க;  வெறித்தனமாக வேட்டையாடும் கே.ஜி.எஃப்; அதிரும் இந்திய திரையுலகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    ipl

    கோலாகலமாகத் தொடங்கும் ஐபிஎல்; இன்று முதல் போட்டி!

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசனின் முதல் போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான...