Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் ஆபத்துகளை அறிவீர்களா? தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

    நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பதனால் ஏற்படும் ஆபத்துகளை அறிவீர்களா? தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்?

    தண்ணீர் என்பது உயிரினங்களின் மிகவும் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு நபர் 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். 

    தண்ணீர் குடித்தால் போதுமே அதற்கு எதற்கு உட்கார்ந்து குடிக்க வேண்டும் என்று கேள்வி எழும். ஏன் நின்று குடித்தால் ஏதாவது பிரச்சனையா என்றால்? ஆம், என்று தான் பதில் தருகின்றனர் மருத்துவர்கள். 

    நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் விளைவுகள்: 

    • நாம் தண்ணீர் தாகம் எடுத்ததும் எங்கு நிற்கின்றோமோ அந்த இடத்தில் இருந்து அப்படியே தண்ணீரை குடிக்கிறோம். இதனால் தண்ணீர் மிகவும் வேகமாக வயிற்றுக்குள் சென்று வயிற்றில் உள்ள உறுப்புகளை வெகுவாக பாதிக்கின்றது.
    • நின்றே தண்ணீர் குடிப்பது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் குடலின் மீது வேகமாக விழுவதால் குடலிறக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.   
    • நின்றுக்கொண்டு தண்ணீர் குடிப்பதனால் சிறுநீரக பிரச்சனைகள் வரலாம் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுநீரக குழாயில் அடைப்பு மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று போன்றவை உருவாகக் கூடும் என்றும் கூறுகின்றனர். 
    • நின்றுக்கொண்டே தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நீரின் சமநிலையை பாதிக்கும். இதனால் காய் கால் மூட்டுவலிக்கள் உண்டாகக் கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

    உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்: 

    • உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது வயிற்றுக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உடல் உறுப்புகளையும் பாதிக்காது. 
    • செரிமானம் மண்டலம் அதன் வேலையை சரியாக செய்யும்.

    தண்ணீரை நாம் எப்போதும் மிகவும் வேகமாக அருந்தக் கூடாது. பொறுமையாக அருந்துவது உடலுக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது. தண்ணீரை முடிந்தவரை நின்றுக்கொண்டு குடிப்பதை தவிர்த்து உட்கார்ந்து குடிக்க பழகுங்கள். அது உங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

    அண்ணாந்து வாயினில் தண்ணீர் ஊற்றும் போது உணவுக் குழலும் மூச்சிக் குழலும் அருகருகே இருப்பதால் மூச்சிக் குழலுக்கு தண்ணீர் செல்ல திக வாய்ப்புகள் உண்டு அதனால் அதை தவிர்ப்பது அவசியம். இப்படி செய்வதால் தான் பொறையேறவும் செய்யும். 

    அதே போல் தண்ணீரை வாய் வைத்து தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பது உடலுக்கு நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....