Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'5ஜி சேவையை என்னால் பயன்படுத்த முடியவில்லை' - பேடிஎம் சி.இ.ஓ போட்ட ட்விட்டால் பரபரப்பு!

    ‘5ஜி சேவையை என்னால் பயன்படுத்த முடியவில்லை’ – பேடிஎம் சி.இ.ஓ போட்ட ட்விட்டால் பரபரப்பு!

    ‘5ஜி ஸ்மார்ட் போனை வாங்கிவிட்டேன் ஆனால், அது வேலை செய்யவில்லை’ என பேடிஎம் தலைமை நிர்வாகி விஜய் சேகர் ஷர்மா புகார் பதிவு செய்துள்ளார். 

    5ஜி சேவையை பயன்படுத்துவதற்காக மட்டுமே, இந்த புதிய கூகுள் பிக்சல் 6 ஏ என்ற 5ஜி சப்போர்ட் செய்யும் மொபைல் போனை வாங்கியதாகவும், அனைத்து அப்கிரேடுகளையும் செய்துவிட்டதாகவும் ஆனால், அந்தச் சேவையை தன்னால் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், பேடிஎம் தலைமை நிர்வாகி விஜய் சேகர் ஷர்மா ட்விட்டரில், ஏர்டெல் மற்றும் கூகுள் நிறுவனங்களை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

    மேலும், அந்தப் பதிவோடு, 5ஜி சேவையை தேர்வு செய்ய முடியாத வகையில், அதற்கான வாய்ப்பு இணைக்கப்படவில்லை என்பதைக் காட்டும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். 

    இதனிடையே, பாரதி ஏர்டெல் நிறுவனம் சென்னை உள்ளிட்ட மிக முக்கிய நகரங்களில் அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவையை தொடங்கியுள்ள நிலையில், கூகுள் தனது ஸ்மார்ட்போன் 5 ஜி சேவையை அப்கிரேடு செய்வது டிசம்பரில் தான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

    இதையும் படிங்க: நோபல் பரிசு வென்றவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்! இப்படியும் ஒரு வாழ்த்தா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....