Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நோபல் பரிசு வென்றவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்! இப்படியும் ஒரு வாழ்த்தா?

    நோபல் பரிசு வென்றவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்! இப்படியும் ஒரு வாழ்த்தா?

    நோபல் பரிசு வாங்கியவரை சக ஊழியர்கள் குளத்தில் தூக்கிப்போட்டு கொண்டாடிய காணொளி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    உலகின் மிக உயரிய பரிசாக நோபல் பரிசு அறியப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படுவது வழக்கம். 

    நோபல் பரிசு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் மருத்துவ விருதுடன் தொடங்கியது.

    2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனின் ஸ்வாண்டே பாபோவிற்கு வழங்கப்பட்டது. இவர்  அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளை சாதனையாக நிகழ்த்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் ரௌவுடி வேட்டை: ‘ஆபரேஷன் மின்னல்’ மூலம் கடந்த 2 நாட்களில் 1310 ரௌவுடிகள் கைது!

    ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் மையத்தில் உள்ள அவரது சக ஊழியர்கள் போபோவின் இந்த அற்புதமான வேலையைப் பாராட்ட சென்றனர். இதன் காரணமாக, பரவசமும் மகிழ்ச்சியும் அடைகிறோம் என்று அந்த அமைப்பின் சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், பாபோ தனது சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  குனிந்து வணங்கும் காணொளியும் பகிரப்பட்டது. ஆனால், இந்த கொண்டாட்டம் இதோடு முடிந்துவிடவில்லை. 

    பொதுவாக, முனைவர் பட்டத்தை கௌரவிக்கும் வகையில் சில நிகழ்ச்சிகள் பாரம்பரிய முறையில் நடத்தப்படுகின்றன. பாபோ நோபல் பரிசைப் பெற்றதால், அவரது சக ஊழியர்கள் இந்த சாதனையைக் கொண்டாட அவருக்கு அதே மரியாதையை வழங்க முடிவு செய்தனர்.

    அதன்படி, பாபோவை சக ஊழியர்கள் (நண்பர்கள்) 3 பேர் தூக்கி சென்று குளத்தில் வீசினர். இந்த காணொளி நோபல் பரிசு அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் மேக்ஸ் பிளாங்க் மையம் சில புகைப்படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....