Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவசூல் ராஜா பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு எழுதிய 29 நபர்கள்; காவல்...

    வசூல் ராஜா பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு எழுதிய 29 நபர்கள்; காவல் துறை அதிரடி கைது!

    இராணுவ அலுவலர்களால் நடத்தப்பட்ட குரூப் ‘சி’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் மருத்துவருக்கான நுழைவுத்தேர்வில் தனது காதில் ப்ளூ டூத் மாட்டிக்கொண்டு, கமல்ஹாசன் தேர்வெழுதி மருத்துவராக தேர்வாகி வெற்றி பெறுவார். இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று சென்னையில் நடைபெற்றதுள்ளது.

    சென்னை, நந்தம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஆர்மி பப்ளிக் பள்ளியில், ராணுவ கன்டோன்மெண்ட் பணிகளுக்கான (Defence Civilian Recruitment) Group ‘C’ என்ற தேர்வு நேற்று (அக்டோபர் 9) காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. தமிழகம் உள்பட வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1,728 நபர்கள் கலந்து கொண்டு இந்தத் தேர்வினை எழுதினர்.

    இதையும் படிங்க:நோபல் பரிசு வென்றவரை குளத்தில் தூக்கிப்போட்ட ஊழியர்கள்! இப்படியும் ஒரு வாழ்த்தா?

    இந்நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 29 நபர்கள், சிறிய வடிவிலான ப்ளூடூத் கருவியைப் பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் தேர்வினை எழுதியதாகப் புகார் எழுந்தது.

    குறிப்பாக, ஹரியானவைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், வினோத் சுக்ரா என்ற நபரை வைத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராணுவ அலுவலர்கள் அளித்தப்புகாரின் பேரில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 நபர்கள் மீது நந்தம்பாக்கம் காவல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும், இதுகுறித்து தேர்வு எழுதியவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....