Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வருகிறது அடுத்த பொது நுழைவு தேர்வு! மத்திய அரசின் புதிய திட்டம் குறித்து பேசிய கல்வித்துறை...

    வருகிறது அடுத்த பொது நுழைவு தேர்வு! மத்திய அரசின் புதிய திட்டம் குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர்

    நாட்டில் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். 

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக காஞ்சிபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். இதனைத்தொடர்ந்து, நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றார். இதன்பிறகு அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: 

    கல்வியாளர்களுக்கு கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் பெரிய கண்ணாடியை பொருத்த வேண்டும். அதை மாணவர்கள் பார்க்கும் போதெல்லாம் அவர்களின் பல்வேறு அம்சங்களை பற்றி அறிந்து கொள்வார்கள். இது சுய நினைவை மேம்படுத்த உதவும்.

    இதையும் படிங்க:பிரபல காமெடி நடிகரின் மகன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர்! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

    நீட் தேர்வு நாட்டின் பொதுவான நுழைவுத் தேர்வு. இது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். ஒரு நுழைவுத் தேர்வுக்கு முன்னதாக மாணவர்கள் பல்வேறு படிப்புகளுக்கு பல்வேறு கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க மட்டுமே பெரும் பணம் செலவழிக்கப்படும்; மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் எந்த மருத்துவப் படிப்புகள் இருந்தாலும் பெறலாம். 

    மேலும், மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதாமல் இருக்கவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கவலையில் இருந்து காப்பாற்றவும் அனைத்து பாடங்களுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு, அது குறித்து  அரசு யோசித்து வருகிறது. 

    நாட்டின் சிறந்த கல்வி குறித்து, புகழ்பெற்ற விஞ்ஞானி தலைமையிலான குழு மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ஒன்றிய அரசு அறிவித்தது. புதிய கல்விக் கொள்கை மாணவர்களை டிஜிட்டல் முறையில் மேம்படுத்த உதவும்.

    இவ்வாறு, அவர் பேசினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....