Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'முதலில் உங்க வாழ்வை நீங்க கொண்டாடுங்க' - பிரின்ஸ் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு!

    ‘முதலில் உங்க வாழ்வை நீங்க கொண்டாடுங்க’ – பிரின்ஸ் பட விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு!

    பிரின்ஸ் திரைப்பட நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது பலராலும் விரும்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. 

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், ‘பிரின்ஸ்’.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

    மேலும், இந்த திரைப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்  நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் எந்த திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

    முன்னதாக பிரின்ஸ் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பிம்பிலாக்கி பிலாப்பி மற்றும் ஜெஸ்ஸிகா பாடல்கள் வெளிவந்துள்ளது. இப்பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. 

    இதையும் படிங்க:நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

    மேலும், சமீபத்தில் பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தீபாவளி வெளியிடாக இத்திரைப்படம் வெளிவரவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    இந்நிலையில், நேற்று ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு பிரபல கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். 

    அவர் பேசுகையில், ‘முதலில் உங்க வாழ்வை நீங்க கொண்டாடுங்க, உங்க குடும்பத்தை கொண்டாடுங்க அப்றமா என்ன நீங்க கொண்டாடுனிங்னா நான் சந்தோஷப்படுவேன்’ என்று பேசினார். இவரின் இந்த பேச்சு குறித்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

    மேலும், பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....