Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புசுவையான கார சாரமான ஆட்டுக்கறி ஊறுகாய் தயார் செய்வது எப்படி?

    சுவையான கார சாரமான ஆட்டுக்கறி ஊறுகாய் தயார் செய்வது எப்படி?

    இனி வாரம் வாரம் ஆட்டுக்கறி எடுக்க வேண்டாம் இப்படி ஊறுகாய் மாதிரி செய்து வைத்துக்கொள்ளுங்கள். தினமும் நாம் சாப்பிடும் சாம்பாருக்கு தொட்டுக்க செய்யலாம் வாங்க…

    தேவையான பொருள்கள்:

    • எலும்பு இல்லாத ஆட்டுக்கறி- 1 கிலோ 
    • சின்ன வெங்காயம்- 300 கிராம் 
    • இஞ்சி – 200 கிராம் 
    • பூண்டு – 200 கிராம் 
    • காய்ந்த மிளகாய்- 25 கிராம் 
    • கிராம்பு- 10 கிராம் 
    • சீரகம்- 10 கிராம் 
    • ஏலக்காய்- 10 கிராம் 
    • கடுகு – 15 கிராம் 
    • வெந்தயம் – 15 கிராம் 
    • ஜாதிபத்திரி, ஜாதிக்காய் – ஒரு சிட்டிகை 
    • நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    • சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, சீரகம், ஏலக்காய், ஜாதிபத்திரி, ஜாதிக்காய் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடுகு வெந்தயம் இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
    • 20 முதல் 25 நிமிடங்கள் வரை பொடியாக நறுக்கிய ஆட்டுக்கறியை அடிகனமான கடாயில் நல்லெண்ணை ஊற்றி  நன்றாக வேக வைக்க வேண்டும். கல்லுப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். ஆடுக்கறியில் இருக்கும் தண்ணீரோடு சேர்ந்து கறி நன்கு சுருங்கி வெந்திருக்கும். mutton pickle
    • பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காய விழுதைச்  சேர்க்க வேண்டும் பிறகு கடுகு வெந்தயம் பொடியைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து ஆட்டுக்கறியை எடுத்து அதில் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தூள் உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். 
    • ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வினிகர் விட்டு ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விட்டு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வேக வைக்க வேண்டும். 
    • அவ்வளவு தான் நாக்கில் எச்சில் ஊரும் அளவிற்கு சுவையான கார சாரமான ஆட்டுக்கறி ஊறுகாய் தயார். 
    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....