Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை பெற்றுத் தரும். நீங்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கு அங்கீகாரமும் பாரட்டும் கிடைக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். உங்கள் உறவினர்களிடம் கலந்தாலோசித்து உங்கள் திருமணத்திற்காக திட்டமிடலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    ரிஷபம்:

    நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இந்த அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். பணியில் வளர்ச்சி காணப்படும். உங்கள் பணிகளை உற்சாகமாகவும் எளிதாகவும் மேற்கொள்வீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் கடின உழைபிற்காக ஊக்கத் தொகை பெறுவீர்கள். இதனால், திருப்தி நிலவும். உங்கள் துணையுடன் நல்ல உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மிதுனம்:

    நீங்கள் பெரியவர்களைக் கூட மகிழ்விக்கும் இனிமையான வார்த்தைகளை பேசுவீர்கள். இறை மந்திரங்கள் சொல்வது இசை கேட்பது மன ஆறுதலை அளிக்கும். உங்கள் பணி மற்றும் தொழிலில் முன்னேற்றமான பலன்கள் காணப்படும். உங்களது செயல்திறனில் திருப்திகரமான நிலை இருக்கும். நிதிநிலைமை  சாதகமாக அமையும். உங்கள் கடின உழைப்பிற்காக சலுகையையும் ஊக்கத்தொகையையும் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நல்ல புரிந்துணர்வுடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் காணப்படுவீர்கள். இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

    கடகம்:

    ஊக்கம் மற்றும் உற்சாகத்துடன் காணப்பட்டு, உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அனைத்து விதத்திலும் வெற்றி காண்பிர்கள். பணி மற்றும் தொழில் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் திருப்தி அளிக்கத் தக்க வகையிலும் காணப்படும். வருமானம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக வெளியே செல்வீர்கள். சந்தோஷத்தை அனுபவிக்கும் நாளாக அமையும். ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.

    சிம்மம்:

    உங்கள் செயல்களை சீராக மேற்கொள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணிகள் பாராட்டு பெறும். உங்கள் பணிகளை நீங்கள் அனுசரித்து கவனமாக மேற்கொள்வீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். நீங்கள் பணத்தை சேமிக்க இயலும். உங்கள் துணையுடன் சிறப்பான நேரத்தை பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கன்னி:

    வெற்றி பெறுவதற்கான தைரியமும் உறுதியும் உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் பணிகளை திறமையுடன் ஆற்றுவீர்கள். உங்கள் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு நீங்கள் ஊக்கத் தொகை பெறுவீர்கள். காதலில் அன்பு மிகுந்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    இதையும் பாருங்க –  கௌதம புத்தர் மற்றும் புத்த மத வரலாறு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....