Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்:

    உங்கள் புத்திசாலித்தனத்தை நன்கு பயன்படுத்துவீர்கள். உங்கள் தரத்தை மேம்படுத்தவும் வெற்றி பெறவும் நீங்கள் முயற்சி எடுக்கலாம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. உங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பீர்கள். நீங்கள் சம்பாதித்த பணத்தை ஆன்மீகக் காரியங்களுக்காக பயன்படுத்துவீர்கள். இதன்மூலம் மன திருப்தி அடைவீர்கள். உங்கள் துணையை சந்தித்து உறவை மேம்படுத்த முயல்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    விருச்சிகம்:

    உங்கள் திறமையான தகவல் தொடர்பின் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்கள் அணுகுமுறை வெற்றி சிகரங்களைத் தொட உதவும். உங்கள் பணிகளை எளிதில் விரைந்து முடிப்பீர்கள். கையிருப்பு பணத்தைக் கொண்டு வசதியாக இருப்பீர்கள். உங்கள் பணத்தை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணையாருடன் நல்ல புரிந்துணர்வு இருக்கும். மன உறுதியின் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

    தனுசு:

    முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ச்சி காண்பீர்கள். பல புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதன் மூலம் திருப்தி அடைவீர்கள். நிதிநிலைமை மிகவும் முன்னேற்றகரமாக அதிக பணத்துடன் காணப்படும். ஊக்கத்தொகை அல்லது இதர வகையில் உங்களுக்கு பணம் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல ஆலோசனைகள் செய்வீர்கள். அப்படிச் செய்வதன் மூலம் உறவில் மகிழ்ச்சியை பராமரிக்கலாம். நல்ல உடல்நிலை காணப்படும்.

    மகரம்:

    உங்கள் இலக்குகளை எளிதில் அடைவதற்கான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். உங்கள் இலக்குகளை குறுகிய நேரத்தில் அடைவீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் போதியதாக இருக்கும். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள ஏற்ற தருணம் அமையும். நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.

    கும்பம்:

    புதிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் தொடர்புக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், உங்கள் கண்ணோட்டம் விரிவடையும். பணியிடத்தில் சந்திப்புகளின் பொழுது நீங்கள் புதுமையான கருத்துகளைக் கூறுவீர்கள். இதை உங்கள் மேலதிகாரிகள் ஒப்புக்கொண்டு பாராட்டுவார்கள். பணப் புழக்கம் சிறப்பாக காணப்படும். உங்களால் சேமிப்பை உயர்த்த முடியும். உங்களின் இனிமையான வார்த்தைகள் உங்கள் துணையை மகிழ்விக்கும். இதனால், உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    :

    நீங்கள் செய்யும் செயல்களில் திருப்தி கிடைக்க திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். பதவி உயர்வு என்ற பெயரில் உங்களுக்கு வெகுமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணியிலிருந்து ஊக்கத் தொகை அல்லது இதர தொகை கூடுதலாக கிடைக்கும். நீங்கள் உங்களின் எண்ணத்தையும் நோக்கத்தையும் துணையிடம் பகிர்ந்து மகிழ்வீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். மனதிடம் காரணமாக ஆற்றல் நிறைந்து நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

    இந்த வார ராசி பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....