Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்உங்களின் எதிர்மறை எண்ணங்களில்....இன்றைய ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    உங்களின் எதிர்மறை எண்ணங்களில்….இன்றைய ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    மேஷம்:

    உங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை நீக்கி விடுங்கள். இன்று உங்கள் பணிகளை விரைந்து முடிக்க இயலாது. உறவில் மகிழ்ச்சி நிலவ உங்கள் உரையாடல்களில் கவனம் செலுத்த வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். அமைதியாக இருப்பது நல்லது.

    ரிஷபம்:

    இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பணி தொடர்பான பயணம் காணப்படும். தகவல் தொடர்பில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வது சிறந்தது.

    மிதுனம்:

    இன்று நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் பணிகளை நீங்கள் எளிதாக மேற்கொள்ளலாம். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

    கடகம்:

    இன்று உங்களிடம் கவனம் அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளை திட்டமிட்டு முறையாக மேற்கொள்ள வேண்டும். உறவில் இணக்கம் குறைந்து காணப்படும். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். அதிகப் பணிகள் அமைதியின்மையும் தலைவலியையும் ஏற்படுத்தும்.

    சிம்மம்:

    இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பணியில் கவனக் குறைவு ஏற்படும். உறவுமுறை மகிழ்ச்சிகரமாக இருக்காது. பணப்புழக்கம் குறைந்து காணப்படும். நீங்கள் அதிகமாக சேமிக்க இயலாது. உங்கள் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

    கன்னி:

    இன்று திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம். பணியிடச் சூழல் பொதுவாக சிறப்பாக இருக்கும். உறவில் மகிழ்ச்சி நிலவ சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது சிறந்தது. இன்று பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். சிறிது ஓய்வெடுப்பதன் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக பராமரிக்கலாம்.

    துலாம்:

    உங்களின் அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். பணியிடச் சூழல் இன்று சிறப்பாக இருக்கும். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். நிதிநிலைமையில் முன்னேறற்றம் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    விருச்சிகம்:

    குடும்பத்தின் வளர்ச்சிக்கான செயல்களை தொடங்க உகந்த நாள். உங்கள் திறமைகளை சிறப்பாக பயன்படுத்தி நீங்கள் உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். பெரியவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். சில தடைகளை சந்தித்த பின் நிதிநிலைமையில் முன்னேற்றம் காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

    தனுசு:

    உங்கள் தன்னம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் எல்லாப் பணிகளையும் குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். இன்று வீட்டில் சுமூகமான சூழ்நிலை காணப்படாது. நிதி நிலைமை மகிழ்சிகரமாக காணப்படும். சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க பதட்டப்படாமல் இருக்க வேண்டும்.

    மகரம்:

    உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் நன்கு பயன்படுத்தினால் நீங்கள் அதிகம் சாதிக்கலாம். இன்று உங்கள் பணியில் ஜொலிப்பீர்கள். குடும்பத்தில் திருப்தி காணப்படும். நீங்கள் மகிழ்ந்து மற்றவர்களையும் உற்சாகப் படுத்துவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். பொதுவாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கும்பம்:

    குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடும்.  இன்று பதட்டம் நிறைந்து காணப்படும். இதனால் கவனமின்மை காணப்படும். மற்றவர்களை அரவணைத்து செல்லும் அணுகுமுறை மூலம் உறவு வலுப்படும். இன்று நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க இயலும். இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

    மீனம்:

    அதிக சிந்தனை உங்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும். பணியில் பதட்டம் காணப்படும். பொறுமையும் நேர்மையும் வளர்ச்சியை உருவாக்கித் தரும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் காணப்படும். பொறுமை அவசியம். நிதி நிலையில் ஸ்திரத்தன்மை பராமரிப்பதை கடினமாக உணர்வீர்கள்..
    உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....