Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மாலத்தீவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்!

    மாலத்தீவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்!

    ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. யோகா தினத்தன்று பல்வேறு நாடுகளில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த யோகா நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்தியாவின் அருகே அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவிலும், மாலத்தீவு அரசு மற்றும் இந்திய கலாச்சார மையம் இணைந்து யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    அந்நாட்டின் தலைநகர் மெலில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உலக யோகா தினத்தன்று காலையில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் மைதானத்திற்குள் நுழைந்து.

    அந்த கும்பல் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நபர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் மாலத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்ததால் அக்கும்பலினை உடனடியாக தடுக்க முடியவில்லை. பின்னர் ராணுவம் வரவழைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி முனு மஹாவர், மாலத்தீவு இளைஞர் நலத் துறை அமைச்சர் அகமது மகலூப், இந்திய கலாச்சார அமைப்பின் நிர்வாகி தன்சீர் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்களின் எதிர்மறை எண்ணங்களில்….இன்றைய ராசிபலன்கள் உங்களுக்காக இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....