Sunday, March 17, 2024
மேலும்
  Homeவாழ்வியல்ஆரோக்கியம்மழைக்காலம் வந்துவிட்டால்.....இதையெல்லாம் சாப்பிடுங்க; உடம்ப தேத்துங்க!

  மழைக்காலம் வந்துவிட்டால்…..இதையெல்லாம் சாப்பிடுங்க; உடம்ப தேத்துங்க!

  மழைக்காலம் என்பது நாம் அனைவரும் ரசிக்கக் கூடிய ஒரு காலமாகும். நிறைய மழைத்துளிகள், பச்சை போர்வை போர்த்தியது போல ஊரே செழுமையாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்கு என்று தனி கவனம் தேவைப்படுகிறது.

  ஏனெனில், அதுவும் இந்த காலக் கட்டத்தில் மலேரியா, டெங்கு, டைபாய்டு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, உடலில் எப்போதும் இல்லாத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

  இதில் மழைக்காலம் வந்துவிட்டால் போதும் சிலருக்கு காய்ச்சல், இருமல், சளி, தலைவலி என மழைக்கால நோய்கள் வந்துவிடும். மழைக்காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் கூட இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும். எனவே மழைக்கலத்தில் எந்த மாதிரியான உணவை எப்படி சாப்பிடலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

  சாப்பிட வேண்டிய உணவுகள் :

  1. மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது, இது சளி பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.

  2. மழைக்காலங்களில் எல்லாவிதமான காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால், நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வதை தண்ணீர் சத்து ஒத்துக்காதவர்கள் தவிர்க்க வேண்டும்.

  3. மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம். எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோ கிக்கக்கூடாது.

  4. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை மழைக்காலங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. எனவே அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள்.

  இறைச்சி, நட்ஸ் வகைகள், தானியங்கள்

  5. நட்ஸ் வகைகள், தானியங்கள், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. அவை பருவமழைக்கால நோய்களைத் தடுக்க உதவும்.

  6. இறைச்சியுடன் வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடுவதை விட மற்ற உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைக்கீரை விதைகள், வாழைப்பழ மாவு போன்றவற்றை இந்த மழைக்காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  7. சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் சில வகை காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கு இலை வடை, புளிச்ச கீரை போன்றவற்றை அதிகமாக எடுத்துரைக்க பரிந்துரைக்கிறார்.

  8. தெருவோரங்களில் விற்கப்படும் பிரைட் ரைஸ் மற்றும் வறுக்கப்பட்ட பல்வேறு துரித உணவுகளை கட்டாயம் இந்த மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். இந்த காலத்தில் இயல்பாகவே வெளிப்புறங்களில் பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். அவை நம் உடலுக்குள் செல்வதற்கு இந்த உணவுகள் பயன்படும். இந்த உணவுகளை உண்பதால் உங்கள் உடல் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

  9. மழைக்காலங்களில் நாம் அதிகமாக வேலை செய்யாத காரணமாக செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த பிரச்சனையை போக்குவதற்கு மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைந்து தடுப்பதற்கும் பழங்கள் நல்ல பலன் அளிக்கக் கூடியது. அவற்றை நீங்கள் தாராளமாக உண்ணலாம். பருவகாலங்களில் அதிகளவில் கிடைக்கும் பிளம்ஸ், செர்ரி, மாதுளை போன்ற பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, நார்ச்சத்து அதிகளவில் நிரம்பியுள்ளதால் இதனை சாப்பி்டுவது நல்லது.

  10. காய்கறி சூப், காளான் சூப் போன்றவற்றை தினமும் சூடாக பருகினால் உடலுக்கு நன்மைப்பயக்கும். அதில் மறக்காமல் மிளகு சேர்த்துக்கொள்வது கூடுதல் நன்மை பயக்கும்.மழைக்காலத்தில் இனிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம். பால் , தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம்.

  இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....