Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதடை செய்யப்படுமா ஆன்லைன் ரம்மி? இன்று அமைச்சரவையில் விவாதம்..

    தடை செய்யப்படுமா ஆன்லைன் ரம்மி? இன்று அமைச்சரவையில் விவாதம்..

    ஆன்லைன் ரம்மி எனப்படும் விளையாட்டு பொதுமக்களை அடிமையாக்குவது மட்டுமல்லாமல் கடன் வாங்கி விளையாடத்தூண்டுதல், அதிக பணத்தினை இழத்தல், மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தினை அதிகரித்தல் போன்ற விளைவுகளுக்கு காரணமாய் உள்ளது.

    தமிழகம் முழுவதும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாடி பலரும் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் தாங்கள் கடினப்பட்டு உழைத்த பணத்தினை பேராசையினால் சில மணி நேரங்களில் இழந்துள்ளனர்.

    பொதுமக்களை இந்த அளவிற்கு அடிமையாக்கும் இந்த விளையாட்டு விரைவில் தடை செய்யப்படும் என்று கூறி இருந்த தமிழக அரசு, இந்த விளையாட்டு தொடர்பாக அறிக்கை ஒன்றிணைத் தயாரிக்க நீதியரசர் சந்துரு தலைமையில் குழு ஒன்றினையும் உருவாக்கியிருந்தது.

    இந்நிலையில், இன்று நீதியரசர் சந்துரு தலைமையிலான குழுவானது தங்களது அறிக்கையினை தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஓப்படைத்துள்ளது.

    இந்த அறிக்கை கூறியுள்ள பரிந்துரைகள் பற்றி இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்கிற தகவலினை தமிழக அரசானது வெளியிட்டுள்ளது.

    சந்துரு தலைமையிலான குழுவானது கொடுத்த அறிக்கையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டானது பலரை அடிமைப்படுத்தியுள்ளதாகவும், இதனால் பலரும் தங்களது உடமைகளை இழந்துள்ளனர் என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. 

    இந்த குழுவின் பரிந்துரைப்படி இன்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு ஓரிரண்டு நாட்களில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசிடமிருந்து தகவல்கள் வந்துள்ளது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யக்கோரி பல புகார்கள், வழக்குகள் வந்த நிலையில் தற்போது நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, தமிழ அரசிற்கு கொடுத்துள்ள அறிக்கையும், இன்று அது பற்றி தமிழக அரசானது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக வெளியான செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விஷயத்துல விக்ரமும் விஜய்சேதுபதியும் ஒன்னுதான்! – சாமுராய்க்கும் 96-க்கும் உள்ள பந்தம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....