Sunday, March 17, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்இப்படியெல்லாம் பாதங்களை பராமரியுங்கள்; மென்மையாக இருக்கும்!

    இப்படியெல்லாம் பாதங்களை பராமரியுங்கள்; மென்மையாக இருக்கும்!

    உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது நமது பாதங்கள். ஒரு மனிதன் வாழ் நாளில் 150,000 மைல்களை விட அதிகமாக நடப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது 5 முறை உலகம் முழுதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்களை நாம் காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இத்தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

    பொதுவாக உடலில் நீர்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொன்டே இருப்பதாலும் இது ஏற்படலாம் .சோரியாசிஸ் , மரபு வழி தோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறண்ட சருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.

    பராமரிப்பு;

    1.தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் சிலருக்கு வெடிப்பு உண்டாகும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும்.

    2. 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும்போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டு விடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக கொள்வோம். சூடான நீர், சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.

    3. தினமும் இரண்டு வேலை பாதங்களில் மாய்ஸரைசர் தடவி வந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்.

    4. ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும். பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் பாதங்களில் மாய்ஸரைசர் தடவி ஷாக்ஸ் அணிந்த கொள்ளவும்.

    5. பாதத்தை அடிக்கடி உயர்த்துவது, நின்று கொண்டிருப்பது, கால்களை நீட்டுவது, நடப்பது ஆகிய உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

    6. தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷினால் சுத்தம் செய்யவும்.

    7. உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மின்னும். சரியான அளவிலான காலணிகளை வாங்கவும். வெவ்வேறு உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட காலணிகளை மாற்றி மாற்றி அணியக்கூடாது.

    8. கால் வலியை புறக்கணிக்காதீர்கள். பெண்கள் உள்ளங்காலில் வலி ஏற்படுவது மாதவிடாய் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம். பாதங்களில் வியர்வை சுரப்பிகள் இருப்பதால் வியர்த்த பாதங்களில் செருப்பு அணியக்கூடாது.

    9. நீரிழிவு நோய் பாதங்களில் குளிர் மற்றும் வெப்ப உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் இரத்த குளுக்கோஸ் என்பது அதிகரித்த விறைப்பு மற்றும் திசு நெகிழ்ச்சி கடினமாகுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே திசுவை தளர்வாக்கவும், காலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் பாத மசாஜ் உதவுகிறது.

    10. மருதாணி பவுடருடன் டீத்தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.

    ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க., ஆதரவு இவருக்குத்தான்…….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....