Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநீலகிரியில் கடும் பனிப்பொழிவு! உதகை உறைபனியில் உறைந்த பொதுமக்கள்!

    நீலகிரியில் கடும் பனிப்பொழிவு! உதகை உறைபனியில் உறைந்த பொதுமக்கள்!

    நீலகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று அதிகாலை அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரியாக பதிவாகி உள்ளது.

    நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் உறைபனி நிலவி வருகிறது. மேலும் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. 

    அந்த வகையில், நீலகிரியில் இன்று அதிகாலை கடுமையான உறைபனி நிலவியது. இதன் காரணமாக இன்று அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பூஜ்ய டிகிரி செல்ஸியஸ் பதிவாகி உள்ளது. மேலும் உதகையில் 2.8 டிகிரி செல்ஸியஸ் ஆகவும் பதிவாகி இருக்கிறது. அதே சமயம் நேற்று அதிகாலை உதைகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்ஸியஸ் ஆக பதிவாகி இருக்கிறது. 

    உதகையில் நிலவி வரும் உறைபனி காரணமாக காந்தல், தலைகுந்தா, எச்.பி.எப் உள்ளிட்ட பகுதிகளில் பச்சை புல்வெளிகள் மறைந்து வெள்ளை கம்பளி போல் காட்சி அளித்தன. இருப்பினும் கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    வாரிசா? துணிவா? டாஸ் போட்டி முடிவு செய்த திரையரங்கு; வைரலான வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....