Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து கொட்டும் கனமழை!

    அமெரிக்காவில் பனிப்புயலை தொடர்ந்து கொட்டும் கனமழை!

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே பனிப்புயல் வீசி வந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. 

    அமெரிக்காவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பனிப்புயல் வீசி வந்தது. இதன் காரணமாக பெரும்பாலான மாகாணங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி போர்வை காணப்பட்டது. பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருளான குடிநீருக்கும் மக்கள் பல மணி நேரங்களாக வாங்க காத்திருந்தனர். 

    இந்தப் பனிப்புயலில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 2 நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நகரின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. இதனால், கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

    வெள்ளப்பெருக்கு காரணமாக பல வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பனிப்புயலைத் தொடர்ந்து தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

    ட்விட்டர் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? – துர்நாற்றத்தில் ஊழியர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....