Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடி வரை விற்கப்பட்டதா...? புயலை கிளம்பியுள்ள பன்வாரிலால் புரோஹித்..!

    தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 50 கோடி வரை விற்கப்பட்டதா…? புயலை கிளம்பியுள்ள பன்வாரிலால் புரோஹித்..!

    தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 40 கோடியில் இருந்து 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தற்போதைய பஞ்சாப் கவர்னராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு தொடங்கி 2021-வரை,4 ஆண்டுகள் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டிருந்தார் .2021-ல் ஏப்ரலில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக பொறுப்பேற்ற பிறகு, பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்.

    பஞ்சாப் மாநில ஆளுநராக தற்போது பொறுப்பு வகித்துவரும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பல்கலைக்கழக துணேவேந்தர்கள் நியமனம் குறித்து ,நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.அவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகா அமைந்துள்ளது.

    அது என்னவென்றால் பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் செயல்பட்டு வரும் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் சத்பீர் சிங் கோசல் என்பவரை துணைவேந்தராக நியமித்தது தொடர்பாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் முதல் மந்திரி பகவந்த் மானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி; ரூ.10-ல் இருந்து ரூ.50-ஆக உயர்ந்த சம்பவம்…

    இந்த மோதலை மனதில் வைத்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது பேசிய பன்வாரிலால் புரோஹித்,பஞ்சாப்பில் யார் தகுதியானவர்கள், யார் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் எனக்கு தெரியாது.மாநிலத்தின் கல்வி தரம் உயர வேண்டும் என்பது மட்டுதான் எனது நோக்கமாக உளள்து .

    தமிழகத்தில் எனது பணியை சிறப்பாக செய்ததற்காக தற்போதைய முதல்வராக இருக்கும் முக ஸ்டாலின் அவர்களால் பாராட்டப்பட்டுள்ளேன். அப்படிப்பட்ட என்னிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன .

    பஞ்சாப் ஆளுநராக நான் நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழகத்தில் கவர்னராக, 20 பல்கலைக்கழகங்களின் வேந்தராக, 4 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். அங்கு நான் ஆளுநராக பதவி வகித்த போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது . ஆனாலும் சட்ட விதிகளின்படியே 27 பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்தேன்.

    அப்படிப்பட்ட என் மீது பஞ்சாப் மாநில அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. அரசியல் சாசனத்தை பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளேன்.

    அதனால் என் கடமையை செய்ய யாரும் தடை போட முடியாது .பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருக்கிறது . அதில் யாராலும் தலையிட முடியாது. ஒரு ஆளுநரின் பொறுப்பு, அனைவருக்கும் வழிகாட்டுவதும் பல்கலைக்கழகங்களைக் கவனிப்பதும் தான் .அதை நான் சிறப்பாகவே செய்து முடிப்பேன் என்று கூறியுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....