Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஎப்போ? என்னைக்கு இந்தியாவுக்கு போட்டி? 'சூப்பர் 12' அணிகள் எவையவை?

    எப்போ? என்னைக்கு இந்தியாவுக்கு போட்டி? ‘சூப்பர் 12’ அணிகள் எவையவை?

    இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தற்போது அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் சூப்பர்-12 சுற்றுகள் தொடங்கியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற 8 அணிகள் ஏற்கனவே சூப்பர்-12 சுற்றுக்கு தகுதிப்பெற்றிருந்தன. 

    இந்நிலையில், மீதமுள்ள 4 அணிகளுக்காக 8 அணிகள் மோதின. இந்நிலையில், தகுதிச்சுற்றில் விளையாடிய 8 அணிகளில் இருந்து, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து போன்ற அணிகள் தகுதிப்பெற்றன. இந்த பன்னிரண்டு அணிகள் இரு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளது. 

    சூப்பர் 12 அணிகள் ; 

    குரூப் 1 – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து.

    குரூப் 2 – இந்தியா, வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே

    இந்திய அணி போட்டிகள் ;

    முதல் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் இன்று (அக்டோபர் 23-ம் தேதி) இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    இரண்டாம் போட்டி – சிட்னி மைதானத்தில் அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவுக்கும், நெதர்லாந்துக்கும் இடையே மதியம் 12.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    மூன்றாம் போட்டி – பெர்த் மைதானத்தில் அக்டோபர் 30-ம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையே மாலை 4.30 மணியளவில் நடைபெறும். 

    நான்காம் போட்டி – அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2-ம் தேதி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெறும். 

    ஐந்தாம் போட்டி – மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 6-ம் தேதி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு இடையே மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. 

    சிட்னி, அடிலெய்ட் நகரங்களில் நடைபெறும் அரையிறுதி மற்றும் மெல்போர்னில் நடைபெறும் இறுதி ஆட்டங்கள் மதியம் 1.30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘பாகிஸ்தானுக்கு விளையாட செல்வீர்களா?’ – ரோஹித் சர்மா அளித்த பதில் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....