Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஹரியானா: கடமையில் இருந்த காவல் கண்காணிப்பாளர் கொலை

    ஹரியானா: கடமையில் இருந்த காவல் கண்காணிப்பாளர் கொலை

    ஹரியானா மாநிலத்தின் நூஹ் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய் மீது கடந்த 19-ம் தேதி கனரக வாகனம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஹரியானா மாநிலத்தில், நூஹ் மாவட்ட துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர சிங் பிஷ்னோய். இவருக்கு ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகில் உள்ள பச்கான் என்ற இடத்தில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுவதாக கடந்த 19-ம் தேதி காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி காலை 11.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு சுரேந்திர சிங் பிஷ்னோய் காவல்துறை அதிகாரிகளுடன் சென்றார். 

    இச்சம்பவத்தின் போது காவல்துறையினரை கண்டதும், பாறைகளை வெட்டி எடுத்துகொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். அந்நேரத்தில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய் நின்று கற்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார். 

    ஆனால், அவரை எதிர்நோக்கி வந்த வாகனம் அவர் மீது ஏறியது. இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் கொலை வழக்கில் குற்றத்தை புரிந்தவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இக்குற்றத்தை புரிந்தவர்கள் ஒருவரையும் விடாமல் அனைவரும் தண்டிக்கப்படுவர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய்  குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 

    இவ்வாறு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். 

    மாவட்ட துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுரேந்திர சிங் பிஷ்னோய்  சரங்கபூர் என்ற கிராமத்தில் பிறந்தார். அதே கிராமத்தில் 1994-ம் ஆண்டு துணை காவல் ஆய்வாளராக அவர் பணியில் சேர்ந்தார். இன்னும் நான்கு மாத காலத்தில் பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில், சுரேந்திர சிங் பிஷ்னோய் கொலை செய்யப்பட்டுள்ளார். 

    இந்நிலையில், கடந்த 19-ம் தேதியே அரியானா காவல் கண்காணிப்பாளரை கனரக வாகனம் ஏற்றிக்கொன்ற வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    இதை தொடர்ந்து, முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சபீர் என்ற கனரக வாகனத்தின் ஓட்டுநர் ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்ளா கூறுகையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரை பிடிக்க சுமார் 30 இடங்களில் சோதனை நடத்தினோம். அதன் பிறகே சபீரை கைது செய்தோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மக்களின் எழுச்சியை அடக்க இலங்கை ராணுவத்துக்கு அதிகாரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....