Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசாமானியனை நசுக்குகிறதா தமிழக அரசு?- ஆவின் தயிர் விலை உயர்வு

    சாமானியனை நசுக்குகிறதா தமிழக அரசு?- ஆவின் தயிர் விலை உயர்வு

    தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தயிர், நெய் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

    தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்குகிறது ஆவின் நிர்வாகம். ஆவின் நிர்வாகம் இன்று அனைத்து மாவட்ட பொது மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், பாலுடன் தொடர்புடைய 29 பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

    அதன்படி,

    • 100 கிராம் தயிர் ரூபாய் 10-ல் இருந்து ரூபாய் 12-ஆக உயர்ந்துள்ளது. 
    • 200 கிராம் தயிர் ரூபாய்  25-ல் இருந்து ரூபாய் 28-ஆக உயர்ந்துள்ளது.
    • பிரீமியம் தயிர் ஒரு லிட்டர்  ரூபாய் 100-ல் இருந்து ரூபாய் 120-ஆக உயர்ந்துள்ளது. 
    • ஒரு லிட்டர் நெய் ரூபாய் 538-ல் இருந்து ரூபாய் 580-ஆக உயர்ந்துள்ளது. 
    • அரை லிட்டர் நெய் ரூபாய் 275-ல் இருந்து ரூபாய் 290-ஆக உயர்ந்துள்ளது.
    • பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூபாய் 30-ல் இருந்து ரூபாய் 35-ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது எனவும் இந்த வரி விலக்கு எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் என்பதையும் பட்டியலிட்டுள்ளார்.

    இதன்படி அரிசி, பருப்பு, கோதுமை மாவு, கம்பு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றியை நோக்கி திரௌபதி முர்மு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....