Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவெற்றியை நோக்கி திரௌபதி முர்மு!

    வெற்றியை நோக்கி திரௌபதி முர்மு!

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகிக்கிறார். 

    கடந்த ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். 

    இந்நிலையில், இன்று (ஜூலை 21) காலை 11 மணி முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான 748 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளில், திரௌபதி முர்மு 540 வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகளையும் பெற்றுள்ளதாக தேர்தல் அலுவலர் பி.சி.மோடி அறிவித்துள்ளார். 

    மேலும் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 3,78,00 என்றும் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 1,45,000 என்றும், 15 எம்பிக்களின் வாக்குகள் செல்லாது எனவும் தெரிவித்துள்ளார். 

    அகரவரிசைப்படி முதல் 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவையும் தேர்தல் அலுவலர் பி.சி.மோடி அறிவிப்பார். 

    இதைத்தொடர்ந்து, அடுத்த உள்ள 20 மாநிலங்களின் நிலவரம் அறிவிக்கப்பட்டு இறுதியாக தேர்தல் முடிவு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.  

    இந்தத் குடியரசுத் தலைவர் தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....