Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி 74 கன அடியாக குறைந்துள்ளது. 

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று (ஜூலை 20) காலை நிலவரப்படி வினாடிக்கு 76 ஆயிரத்து 645 கன அடியாக இருந்தது. இதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 21) காலை மேலும் குறைந்து வினாடிக்கு 74 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 120.71 அடியாக இருந்தது. 

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    இதன்காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். 

    நட்சத்திரங்கள் வடிவில் கடற்கரை மணல்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....