Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜிஎஸ்டி பெயரில் மக்களுடன் விளையாடும் நிர்மலா சீதாராமன்!

    ஜிஎஸ்டி பெயரில் மக்களுடன் விளையாடும் நிர்மலா சீதாராமன்!

    சில்லறை விற்பனையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும் சில பொருள்களுக்கு வரியைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

    இதனையடுத்து, பண்டல் செய்யப்பட்ட அரிசி, தானியங்கள் உள்ளிட்டவைகளுக்கு 5 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த அறிவிப்பு திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. 

    இதனிடையே, பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், நடுத்தர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தது. மேலும் உணவு தானியங்களுக்கு  ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. 

    இந்நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன், சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது எனவும் இந்த வரி எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருத்தம் எனவும் பட்டியலிட்டுள்ளார். 

    இதன்படி அரிசி, பருப்பு, கோதுமை மாவு, கம்பு, ரவை, தயிர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....