Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇலங்கையில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுரை

    இலங்கையில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள அறிவுரை

    இலங்கையில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கையின் தலைநகர் கொழும்புவில் கடந்த 18-ம் தேதி இரவு இந்திய தூதரக அதிகாரி விவேக் வர்மா தாக்குதலுக்கு உள்ளானார். 

    இலங்கையில் தாக்குதலுக்கு உள்ளான இந்திய தூதரக அதிகாரி விவேக் வர்மாவை இலங்கையில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி காலை சந்தித்து நலம் விசாரித்தனர். 

    இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

    கொழும்புக்கு அருகில் திங்கள் கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய தூதரக அதிகாரி விவேக் வர்மாவை இந்திய உயர் அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி  காலை சந்தித்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

    இந்தியா – இலங்கை மக்களிடையிலான உறவு, அன்பும் நட்பும் நிறைந்தது. இலங்கையிலுள்ள இந்தியர்கள் தங்கள் பகுதியில் உள்ள சூழ்நிலையை அறிந்து பயணங்களை எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டும். உதவி தேவைப்படுபவர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். 

    இவ்வாறு, இலங்கை இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    தவிக்கும் இலங்கையை மீட்பாரா புதிய அதிபர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....