Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? – அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!

    தென்னிந்திய திரையுலகில் அஜித்குமார் உச்சத்தில் உள்ள நடிகர் என்பதில்  எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

    வெகுலி நாயகனாக, காதல் நாயகனாக, அழகான நாயகனாக, அமர்களமான நாயகனாக, எதார்த்த நாயகனாக பல அவதாரங்களை எடுத்தவர் அஜித்குமார். 

    இவரின் பலத்தை, உழைப்பை, சம்பாத்தியத்தை இந்த உலகிற்கு பறைசாற்ற  இவரின் ரசிக பட்டாளமே போதுமானது. அஜித்குமார் அவர்களுக்கென இருக்கும் ரசிக பட்டாளத்தை வைத்தே நாம் மேற்கூறியவற்றை முடிவு செய்துக்கொள்ளலாம். 

    உழைத்தால் உயரலாம்! 

    உழைப்பால் உயர்ந்தவர்கள் அனைவருக்குமே உழைப்பாளர் தினத்தன்று பிறந்தநாள் வாய்க்குமா என்பது தெரியாது ஆனால் அது சிலருக்கு வாய்க்கும். அந்த சிலரில் மிக முக்கியமானவர், நம் அஜித்குமார். 

    உழைத்தால் உயரலாம் என்று பலர் நமக்கு காண்பித்தாலும், அஜித்குமார் அவர்கள் நமக்கு காண்பித்த உழைப்பு என்பது எளிதில் நம்மை உருக வைத்தது; பிரம்மிக்க வைத்தது; மிரள வைத்தது; நம்மையும் உழைக்கத் தூண்டியது.

    ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே மே ஒன்றாம் தேதியாகிய நாளை அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கிறது. அவரின் மிகச்சிறந்த திரைப்படங்களை நினைவு கூற பலரும் தயாராகி வருகின்றனர். சமூகவலை தளம் நாளை விழாக்கோலமாக மாற உள்ளது. 

    அஜித்குமார் என்கிற மென்மை:

    கடந்த சில வருடங்களாக பெரும்பாலும் ஆக்‌ஷன் கதாநாயகனாக வலம் வரும் அஜித்குமார், மிகவும் மென்மையான திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தற்காலத்தில் பலருக்கும் மறந்தவிட்டதோ என்ற ஐயப்பாடு பலரிடத்தில் நிலவி வருகிறது. தற்காலத்தில் புதிதாக உருவாகியுள்ள பல அஜித்குமார் ரசிகர்களுக்கு அவரின் மென்மையான திரைப்படங்கள் தெரிவது கேள்விக்குறிதான்.

    இப்படியான சமயத்தில் பலரும் கொண்டாடும் அஜித்குமார் அவர்களின் திரைப்படங்களில் பலரும் மறந்துப்போன ஒன்றை, இப்படியாக அஜித்குமார் நடித்திருக்கிறாரா என்ற எண்ண ஓட்டம் எழும் வகையில் உள்ள திரைப்படம் ஒன்றுள்ளது. 

    மென்மையாக, எதார்த்தத்திற்கு மிக அருகில் இருந்தபடியாக அஜித்குமார் பல திரைப்படங்கள் நடித்திருந்தாலும், ஒரு திரைப்படம் பலரையும் எளிதில் தன்னுடன் கணெக்ட் செய்யும் வித்தையை நிகழ்த்தியது; நிகழ்த்திய வண்ணம் உள்ளது; நிகழ்த்திய வண்ணமே இருக்கும். அப்படியான ஒரு திரைப்படம்தான் ‘முகவரி’!

    இத்திரைப்படத்தில் அஜித்குமாரின் கதாப்பாத்திரத்தின் பெயர், ஶ்ரீதர்! எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத இயல்பாக தனது கனவை தூரத்திக்கொண்டு செல்லும் இளைஞனாக அஜித்குமார் நடித்திருக்கும் விதம் கொள்ளையழகு! ஒரு முன்னணி நாயகன் இப்படியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது எப்போதும் அவர் ரசிகர்கள் பெருமைப்படக் கூடிய ஒன்றுதான்.

    கனவின் மீதான ஏக்கத்தினை வெளிப்படுத்துவதிலும், இளைஞனாக துவண்டுப்போய் இருக்கும் இடத்திலும், கனவினை தூரத்தும் வீரியத்திலும், குடும்ப சூழல்களால் கலங்கும் இடத்திலும், தனது நடிப்பால் பார்க்கும் நம்மை உருகச்செய்வார், அஜித்குமார். 

    நாயகன் என்பவன் குறைகளற்றவன் என்பதை ஶ்ரீதர் கதாப்பாத்திரம் சுக்குநூறாக உடைத்திருக்கும். நாயகன் என்பவனும், சாதாரணமானவன்தான் என்றும், அவனுக்கும் உதவிகள் தேவைப்படும், அவனுக்கும் உந்துசக்தி தேவை, அவன் வெற்றிகளை மட்டுமே அடைய மாட்டான் என பல பிம்பங்களை அஜித்குமார் அவர்களின் ஶ்ரீதர் கதாப்பாத்திரம் நம்மிடம் விதைத்திருக்கும். 

    வளர்ந்து வந்த அக்காலக்கட்டத்தில் இப்படியான ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பை அஜித்குமார் தேர்வு செய்தது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான். இந்த திரைப்படத்தில் இருக்கும் அஜித்குமாரை அனைவருமே ஒரு படி மேலாகவே நேசிப்பர். 

    முற்றிலுமாய் மாறுபட்ட அஜித்குமாரை நீங்கள் முகவரி திரைப்படத்தில் காணலாம்! ஆக்‌ஷன், குடும்பபாங்கு, டான், மீட்பர் போன்ற பல கதாப்பாத்திரங்களில் அஜித்குமார் நடிப்பது குதூகலமாகத்தான் இருக்கிறது.

    ஆனால், அவ்வபோது இப்படியான மென்மையான திரைப்படங்களிலும் அஜித்குமார் நடிக்க அதைக்காண பலர் காத்திருக்கின்றனர். 

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே-62 திரைப்படம் மென்மையானதாக இருக்கும் என்ற தகவல்கள் பல கசிந்த வண்ணம் உள்ளன. ஏகே-62 திரைப்படம் அப்படியாக இருப்பின் அது கூடுதல் சந்தோஷமே! 

    ‘எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்

    பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்’

    51 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் அஜித்குமார் அவர்களுக்கு மேன்மேலும் வெற்றிகள் குவியவும், சந்தோஷங்கள் நிறையவும் தினவாசல் சார்பாக வாழ்த்துகள்!

    இதையும் படிக்கலாமே; கொலை நிகழ்த்தியவனின் புத்திசாலித்தனம் கதை முழுக்க நம்மை வியக்க வைக்கிறது

    தீபாவளியைக் குறி வைக்கும் ‘சர்தார்’: கார்த்தி படம் குறித்து முக்கிய தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....