Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைமே -1 தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட முக்கிய காரணம் இது தான்!

    மே -1 தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட முக்கிய காரணம் இது தான்!

    மே 1 ‘உலக தொழிலாளர் தினம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே… தொழிலாளர்களை மே 1 அன்று என நினைத்து போற்றி வாழ்த்து கூறுவது வழக்கம். ஆனால், இந்த தொழிலாளர் தினம் கொண்டாட முக்கிய காரணம் என்னவென்று தெரியுமா? வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம். 

    மே தினம் கொண்டாடப்பட முக்கிய காரணம், 18 மற்றும் 19 நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சி தான் காரணம். வளர்ந்த நாடுகள் மற்றும் ஓரளவு வளர்ந்த நாடுகளில் வேலையின் நேரம் என்பது அதிகமாக்கப்பட்டது. இதனால், தொழிலாளர்கள் அனைவரும் 15 முதல் 18 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். உலகின் பல நாடுகளிலும் இதே சூழல்தான் பெரும்பாலும் நிகழ்ந்தது. 

    மிக முக்கியமாக பேசப்படுவது இங்கிலாந்து சாசனம் தான். இதில், சில முக்கிய கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தபட்டது. மேலும் 10 மணி நேரமாக வேலை இருக்க வேண்டும் என்பது தான். சிகாகோ நகரில் மாபெரும் எழுச்சி போராட்டமும் நடைபெற்றது. 

    பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளிலும் நாடுகளிலும் போராட்டம் வலுப் பெற்றது. வேலை சுமை தாங்க முடியாத தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினர். இதில் பலருக்கு தோல்வி தான் கிடைத்தது என்றாலும் உலக நாடுகளில் என்னவென்ன நடக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளவும் பிற உலக நாடுகளில் தொழிலாளர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்தது என்றே கூறலாம். 

    சுமார் 1830-களில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் 1890 களில் தான் சற்று குறைந்து காணப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், 1889 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் தான். இந்த கூட்டத்தில், 18 நாடுகள் கொண்ட 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசித்தனர். இது அப்போது மிகப் பெரிய கூட்டமாக பார்க்கப்பட்ட்டது.

    இக்கூட்டத்தில், 8 மணி நேர போராட்டத்தை வலியுறுத்த போவதென, பல முடிவுகளை எடுத்தனர். 1890 ஆம் ஆண்டு, மே 1 ஆம் தேதி உலகளவில் தொழிலாளர்களுக்கான இயக்கங்களை நடத்திட வேண்டும் என்று அறிவிக்கபட்டது. இதன்மூலம் தான் ஆண்டு தோறும் நாம், மே 1 அன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தான் தொழிலாளர் தினம் கொண்டாப்பட்டது. 

    இந்த உலகில் அனைத்தும் இயங்க தொழிலாளர்கள் மிக முக்கியம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. 

    அனைவருக்கும் உலக தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....