Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ட்விட்டரை பதம் பார்க்கப் போகும் எலான் மஸ்க்: வகுத்துள்ள புதிய திட்டங்கள் என்னென்ன?

    ட்விட்டரை பதம் பார்க்கப் போகும் எலான் மஸ்க்: வகுத்துள்ள புதிய திட்டங்கள் என்னென்ன?

    உலகின் மிகப்பெரிய மைக்ரோ பிளாகிங் தளம் தான் ட்விட்டர். இதனை கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, எலான் மஸ்க் வாங்கினார். $44 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் கோடி ரூபாய் அளவில் இந்த வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதன் பிறகு, ட்விட்டரின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும் என்றும், அனைவரும் சுதந்திரமாகப் பேசலாம் என்றும் எலான் மஸ்க் தெரிவித்தார். இந்நிலையில், எலான் மஸ்க், அவரது ட்விட்டர் பக்கத்தில், ட்விட்டர் குறுஞ்செய்திகளுக்கு End To End Encryption பாதுகாப்பு அம்சத்தை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

    “சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும், மேலும் ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் தளமாகும்”, என்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார்.

    ட்விட்டரை சிறந்ததாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறார் எலான் மஸ்க். “புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க அல்காரிதம்களை ஓபன் சோர்ஸ் (Open Source) ஆக்குவதன் மூலமும், ஸ்பேம் போட்களைத் தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், ட்விட்டரை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்ததாக மாற்ற முடியும். இதையே நான் விரும்புகிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ‌மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ள ட்விட்டர், அதனை மிகச் சரியான வழிகளில் செயல்முறைப்படுத்த, சமுதாயத்துடன் இணைந்து, பணியாற்ற நான் விரும்புகிறேன் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

    இன்னமும் நிறைய வேடிக்கைகளை பயனர்கள், ட்விட்டரில் அனுபவிக்கலாம் என்று கூறிய எலான் மஸ்க், அமெரிக்காவின் பல பெரிய நிறுவனங்களையும் வம்பிழுத்து பேசியுள்ளார். அவரது இன்னொரு ட்விட்டர் பதிவில், பிரபலமான குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமான ‘கொக்கக் கோலா’ வாங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    ‌இதற்கு ட்விட்டர் பயனர் ஒருவர், 1894 ஆம் ஆண்டு, கொக்கக் கோலா தொடங்கப்பட்ட காலத்தில், ஒரு பாட்டிலில் 3.5 கிராம் அளவிற்கு கொக்கைன் கலக்கப்பட்டு இருந்தது. இதனை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வாருங்கள் என கோரிக்கை அளித்தார். அதற்கு, வாருங்கள் Red Bull-ஐ ஓட விடுவோம் என்று நகைச்சுவயாக எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்.

    மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை வாங்கி, ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரிசெய்யுங்கள் என்ற ட்விட்டர் பதிவுக்கு, “என்னால் அற்புதச் செயல்களை செய்ய முடியாது” என நக்கலாக பதிலளித்தார் எலான் மஸ்க்.

    நியூயார்க் மற்றும் ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு போலியாக பயனர்களை எப்படி சேர்த்தார்கள் என்று, டேவ் ரூபின் எனும் எழுத்தாளர் ட்விட்டரில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், நான் அதை கவனித்து வருகிறேன் என்று மிகச் சாதாரணமாக கூறினார்.

    ‌ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு தான், எலான் மஸ்கின் பக்கத்தை, அதிகப் படியான பயனர்கள் பின் தொடர்ந்து வருவதாக, பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க; விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், உயிரிழந்த சம்பவம் – காவல்துறையினர் மீது புகார்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....