Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாணவிக்கு 34 முறை கத்திக்குத்து; மரண தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்..

    மாணவிக்கு 34 முறை கத்திக்குத்து; மரண தண்டனை விதித்த குஜராத் நீதிமன்றம்..

    மாணவியை 34 முறை கத்தியால் குத்திய சம்பவத்தில், குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

    குஜராத் மாநிலம் ஜெட்பூர் தாலுகாவில் உள்ள ஜெதல்சர் கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே ஊரைச் சேர்ந்த ஜெயேஷ் சர்வையா நீண்ட நாள்களாக பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். 

    இந்நிலையில் மார்ச் 16, 2021 அன்று, ஜெயேஷ் சர்வையா மாணவியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார், ஆனால் மாணவி அதற்கு மறுத்துவிட்டார்.

    இதையடுத்த மாணவியின் மீது கோபமடைந்த அவர் மாணவியை 34 முறை கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்த, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பின்னர், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், குஜராத் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ஐபிசியின் 302 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்துள்ளது. 

    இச்சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கிய கொலை, எனவே இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு இம்ரான்கான் மீது கைது வாரண்ட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....