Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு இம்ரான்கான் மீது கைது வாரண்ட்

    ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு இம்ரான்கான் மீது கைது வாரண்ட்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

    அந்த வழக்குகளில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்ற வழக்கில் லாகூர் உயர்நீதிமன்றம் இம்ரான்கானுக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை கடந்த மாத இறுதியில் பிறப்பித்து உத்தரவிட்டது. 

    இதைத்தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு காவல்துறையினர் சென்றபோது, இம்ரான்கான் தலைமறைவானார். இருப்பினும் தொடர்ந்து தொலைக்காட்சி மூலமாக தொண்டர்களுக்கு உரையாற்றி வந்தார். மேலும் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். 

    இந்நிலையில், மூத்த காவல் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான்கான் மீது ஜாமினில் வெளிவரமுடியாத அளவுக்கு கைது பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

    பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் ‘சீரியல் கிஸ்ஸர்’

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....