Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் பணி அமர்வு

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் பணி அமர்வு

    வரலாற்றில் முதன் முறையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சுரேகா யாதவ் என்ற பெண் ஓட்டுநர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

    நாட்டில் விரைவு ரயில் போக்குவரத்தின் ஒரு பகுதியாக நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்முறையாக புது தில்லியில் இருந்து கான்பூர், அலகாபாத் வழியாக வாரணாசி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து 2-வது சேவை டெல்லி – காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை – காந்தி நகர் வழித் தடத்திலும், 4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா – புதுடெல்லி வழித்தடத்திலும், 5-வது சேவை சென்னை-பெங்களூரு-மைசூரு வழி தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், கடந்த பிப்ரவரி மாதம் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில் நிலைய முனையத்தில் இருந்து சோலாப்பூர் வரை வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. 

    இந்நிலையில், மும்பையில் இருந்து புனே, சோலாப்பூர் வழியே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெண் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணி அமர்த்தப்பட்டுள்ளார். 

    இது தொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் பக்கத்தில், பெண் சக்தியால் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா vs இந்தியா: விலகிய கம்மின்ஸ், கேப்டன் ஆன ஸ்டீவ் ஸ்மித்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....