Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க வேணுகோபால் கமிஷனை அரசு ஏற்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க வேணுகோபால் கமிஷனை அரசு ஏற்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் வேணுகோபால் கமிஷனை அரசு ஏற்று அரசனையாக வெளி கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நைனார் நாகேந்திரன், காந்தி, சரஸ்வதி மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தனர்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை முதலமைச்சரிடம் கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய நயினார் நாகேந்திரன்,

    நெல்லையப்பர் கோவிலுக்கு அண்டர் கிரவுண்ட் கேபிள் அமைத்து தேர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் அதேபோல மொடாகுறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி தமது தொகுதியில் கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவர மத்திய அரசு அனுமதி கொடுத்திருப்பதாகவும் தமிழக அரசு இடமளிக்க ஒப்புதல் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

    பின்னர் செய்தியார்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் :

    மதக் கலவரங்களை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கமிஷனை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    மதக் கலவரங்களை தடுக்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் இனி ஒரு வழிபாட்டு தளம் இருக்கிறது என்று சொன்னால் அடுத்த மதத்திற்கான வழிபாட்டு தளம் கட்ட வேண்டுமானால் அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று தான் கட்ட வேண்டும் என்கிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் எதிர்காலங்களில் மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் வேணுகோபால் கமிஷனை அரசு ஏற்று அரசனையாக வெளி கொண்டுவந்து சட்டமாக கொண்டு வந்தால், எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராது என முதல்வரிடம் தெரிவித்ததாக தெரிவித்தார்.

    அதேபோல அரசு நிலங்கள் மற்றும் அறநிலைக்கு துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவை தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் இடம் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

    முதலமைச்சர் அனைத்து விஷயங்களையும் கவனமாக கேட்டுக்கொண்டார், நிச்சயம் இந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்கதமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை! ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த நடிகை குஷ்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....