Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை: விளக்கமளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

    மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடவில்லை: விளக்கமளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

    மாநில அரசின் செயல்பாட்டில் தான் தலையிடவில்லை என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். 

    கேரள உயர்கல்வித்துறையில் ஆளுநரின் தலையீடு இருப்பதாக கூறி அதனை எதிர்க்கும் வகையில், ஆளும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் இன்று திருவனந்தபுரதத்தில் உள்ள ராஜபவனுக்கு மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது. 

    முன்னதாக ஆளும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜபவனுக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த பேரணியை நிறுத்த உத்தரவிட முடியாது என கேரள உயர்நீதிமன்றம் மறுத்து தெரிவித்திருந்து. 

    இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கேரள அரசு மீது கடுமையான விமர்சங்களையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார். 

    அப்போது அவர் பேசியதாவது: அரசாங்கத்தின் வெளியில் நான் தலையிட முயற்சி செய்ததற்கு ஏதாவது ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் என்று ஆவேசம் அடைந்த ஆளுநர், பல்கலைக்கழங்கங்களின் தினசரி செயல்பாட்டில் அரசாங்கம் தலையிட்டதற்கு, 1001 உதாரணங்களை என்னால் அளிக்க முடியும் என்றும், தான் அழுத்தங்களுக்கு அடிபணியும் நபர் இல்லையெனவும் கூறினார். 

    தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், கடந்து ஆண்டு வரை ஏன் இந்த பிரச்சனையை எழுப்பவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். 

    கேரளாவில் 13 பல்கலைக்கழகங்கள் இருந்தன. அங்கு அனைத்து நியமனங்களும் சட்டவிரோதமானது; சட்டத்தை மீறி 100% பணிநியமனங்கள் நடந்த மாநிலம் வேறு ஏதேனும் இருக்கிறதா? பல்கலைக்கழகங்கள் கட்சித் தொண்டர்களும் அவர்களது உறவினர்களும் ஏகாதிபத்தியமாக மாறிவித்தாகவும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்கஎதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம் என மருத்துவ துறை திட்டமிட வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....