Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கூகுள் வெளியிட்ட பட்டியல்; இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படம்..

    கூகுள் வெளியிட்ட பட்டியல்; இடம்பெற்ற ஒரே ஒரு தமிழ் திரைப்படம்..

    தனது இந்திய பயனர்களால் அதிகம் தேடப்பட்ட சொற்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    2022–ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம். இதனால், இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்கள், அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் போன்ற பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

    இதில், 2022-ஆம் ஆண்டில் இந்திய பயனர்களால் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் பட்டியல் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, வெளிவந்த பட்டியலின் முதல் இடத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த இந்தி திரைப்படமான பிரம்மாஸ்திரா: பாகம் 1 இடம்பெற்றுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 (கன்னடம்), தி காஷ்மீர் ஃபைல்ஸ் (இந்தி), ஆர்ஆர்ஆர் (தெலுங்கு), காந்தாரா (கன்னடம்), புஷ்பா (தெலுங்கு), விக்ரம் (தமிழ்), லால் சிங் சத்தா (இந்தி), த்ரிஷ்யம் 2 (இந்தி) , தோர் ; லவ் அண்ட் தண்டர் (ஆங்கிலம்) உள்ளிட்ட திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 

    இதேபோல,  2022-ஆம் ஆண்டில் இந்திய பயனர்களால் அதிகம் தேடப்பட்ட சொற்களில் வோர்டில் (wordle) முதலிடம் வகிக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா – இங்கிலாந்து போட்டி, உக்ரைன், ராணி எலிசபெத், இந்தியா – தென்னாப்பிரிக்கா, உலகக்கோப்பை, இந்தியா-மேற்கிந்திய தீவுகள், ஐ-போன் 14, அமெரிக்க சீரியல் கில்லர் ‘ஜெஃப்ரெ தாமெர்’, இந்தியன் பிரிமீயர் லீக் போன்றவைகள் உள்ளன. 

    திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் காலமானார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....