Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் காலமானார்..

    திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் காலமானார்..

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 

    தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சிவ நாராயணமூர்த்தி, நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார். 

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

    படப்பணிகள் ஏதும் இல்லாத போது, தனது சொந்த ஊருக்கு சிவ நாராயணமூர்த்தி செல்வது வழக்கம். அவ்வகையில், சிவ நாராயணமூர்த்தி தனது சொந்த ஊரான பொன்னவராயன் கோட்டையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லதில் காலமானார். அவருக்கு வயது 67.  அவருக்கு இறுதிச்சடங்குகள் இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    சிவ நாராயணமூர்த்தி இறப்புக்கு, திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    புரோ கபடி: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்ற தமிழ் தலைவாஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....