Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைமாண்டஸ் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம்! வானிலை ஆய்வு மையம்

    மாண்டஸ் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம்! வானிலை ஆய்வு மையம்

    மாண்டஸ் புயலின் நகரும் வேகம் குறைந்து வருவதால், கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. 

    இந்த மாண்டெஸ் புயல், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இதன் காரணமாகா நேற்று மாலையே புயலாக மாறும் என கணிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு நகரும் வேகம் குறைந்தததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. 

    இதனிடையே தற்போது மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டர் அளவுக்கு குறைந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் மாண்டஸ் புயல் காரைக்காலில் இந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 620 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாளை நள்ளிரவு ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம், வட தமிழகம் புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    வங்கக் கடலில் புயல் சின்னம் காரணமாக கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    புரோ கபடி: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்ற தமிழ் தலைவாஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....