Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடரை இழந்த இந்திய அணி; காயத்தை பொருட்படுத்தா ரோஹித் சர்மா..

    தொடரை இழந்த இந்திய அணி; காயத்தை பொருட்படுத்தா ரோஹித் சர்மா..

    இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. 

    இந்தச் சுற்றுப்பயணத்தில் கடந்த 4-ஆம் தேதி இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

    இந்திய அணியின் பேட்டிங் சொதப்பியதே, கடந்த போட்டியின் தோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. 

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதையடுத்து, டக்காவில் ஶ்ரீ பங்ளா நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. 

    முதல் இன்னிங்ஸ்

    இதைத்தொடர்ந்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக, கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த வீரர்களும் எளிதில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 

    இச்சூழலில்தான், மஹ்முதுல்லா மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இவர்களின் ஜோடி இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. மந்தமாக சென்றுக்கொண்டிருந்த வங்கதேச அணியின் ஸ்கோரை இந்த ஜோடி மளமளவென உயர்த்தியது. 

    மஹ்முதுல்லா 77 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆனால், மறுபுறம் விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை விக்கெட் இழக்காமல் ஆட்டக்களத்தில் இருந்தார். கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மெஹிதி ஹசன் மிராஸின் அற்புத ஆட்டத்தால் வங்கதேச அணி வெற்றிப் பெற்றிருந்தது. 

    மொத்தத்தில், 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 271 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது, இந்திய அணி வீரர்கள் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கினர். 

    இரண்டாம் இன்னிங்ஸ்

    இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி, ஷிகர் தவான் முறையே 5 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து விளையாட, மறுபுறம் களமிறங்கிய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். 

    ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களிலும், அக்சர் படேல் 56 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி 207 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. 

    இந்த ஆட்டத்தில், முன்னதாக வங்கதேச இன்னிங்ஸில் 2-வது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரில் வங்கதேசத் தொடக்க வீரர் அனாமுல் ஹக், ஸ்லிப் பக்கம் அளித்த கேட்சை நழுவ விட்டார் ரோஹித் சர்மா. அப்போது பெரு விரலில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக ஓய்வறைக்குத் திரும்பினார் ரோஹித் சர்மா. உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு அவர் சென்றதால் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

    பின்னர், ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பெரு விரல் காயத்துடன் களத்திற்கு வந்தார், ரோஹித் சர்மா. இவர் சிறப்பாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோஹித் சர்மா 51 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். 

    இந்த தோல்வியின் மூலம், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. அடுத்த ஒருநாள் போட்டி வருகிற 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

    புரோ கபடி: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்ற தமிழ் தலைவாஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....