Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா கூகுள்?

    12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறதா கூகுள்?

    கூகுள் நிறுவனம் தனது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக  அறிவித்துள்ளது. 

    உலகளவில் முக்கிய நிறுவனங்களாக பார்க்கப்படும் அமேசான், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. 

    இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் உலகம் முழுவதும் தனது 12,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக நேற்று அறிவித்தது.

    இந்தப் பணிநீக்கம் தொடர்பாக ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். அந்த மின்னஞ்சலில், பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கூகுள் நிறுவனத்தில் 1.86 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 5,000 பேர் ஆவர். இந்த பணிநீக்கத்தால் பெருமளவில் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

    லீனா மணிமேகலை மீது பாய்ந்த வழக்குகள்; உச்சநீதிமன்றம் விதித்த தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....