Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாலீனா மணிமேகலை மீது பாய்ந்த வழக்குகள்; உச்சநீதிமன்றம் விதித்த தடை

    லீனா மணிமேகலை மீது பாய்ந்த வழக்குகள்; உச்சநீதிமன்றம் விதித்த தடை

    லீனா மணிமேகலை மீது பதியப்பட்ட வழக்குகளில் நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

    இந்திய ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் ‘காளி’ எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இத்திரைப்படம் ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெறும் ‘ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற கனடா திருவிழாவில் திரையிடப்பட்டது. 

    இந்த திரையீடலை அடுத்து, லீனா மணிமேகலை தனது காளி படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அந்த போஸ்டரில், இந்துக்களின் கடவுளான காளி வேடத்துடன் ஒருவர் புகைப் பிடிப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சித்தரிப்பானது மாபெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதில் தில்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் நீதிமன்றங்களில் தன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் லீனா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

    அப்போது, லீனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், ‘இந்து மத உணர்வுகளை புண்படுத்த வேண்டுமென்ற நோக்கம் லீனாவுக்கு கிடையாது. அனைத்தையும் உள்ளடக்கியவர் காளி என்று உருவகப்படுத்துவதே ஆவணப்படத்தின் நோக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

    வாதங்களை கேட்டப்பின்பு, லீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் இனிமேல் பதிவு செய்யப்படக் கூடிய வழக்குகளில் அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

    இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது, பிசிசிஐ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....