Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது, பிசிசிஐ!

    இந்திய அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது, பிசிசிஐ!

    முதல் ஒருநாள் போட்டியில்  இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் பிசிசிஐ சார்பில் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகளில் அந்த அணி விளையாட உள்ளது. 

    இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த 18-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் சுப்மன் கில் 208 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்தார். 

    350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. 

    இதன்மூலம், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாளை ராய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. 

    இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டியில்  இந்திய அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் பிசிசிஐ சார்பில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஓவர்களை இந்திய அணி தாமதமாக வீசியதால் இந்திய அணி வீரர்களின் ஒரு நாள் ஊதியத்தில் இருந்து 60% பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று வரை புதுச்சேரி அரசியல் அதிகாரம் சுதந்திரம் அடையவில்லை – அன்பழகன் பேட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....