Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மருமகனால் காத்திருப்பு; டென்ஷனான புதுச்சேரி முதலமைச்சர்

    மருமகனால் காத்திருப்பு; டென்ஷனான புதுச்சேரி முதலமைச்சர்

    சட்டக்கல்லூரி பேருந்து அர்ப்பணிப்பு விழாவிற்கு தனது மருமகனும், பாஜக அமைச்சருமான நமச்சிவாயம் தாமதமாக வந்ததால் முதலமைச்சர் ரங்கசாமி கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி பாஜக மாநிலங்களவை எம்.பி. செல்வகணபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு சட்டக்கல்லூரி பேருந்து அர்ப்பணிப்பு விழா புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடந்தது.

    பேருந்தும் சட்டப்பேரவை வாயிலில் நிறுத்தப்பட்டு தொடங்கி வைக்க, சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவைத்தலைவர் செல்வம், சட்டக்கல்லூரி முதல்வர் சீனிவாசன் தயாராக இருந்தனர். நிகழ்வில் பங்கேற்க வருமாறு முதல்வரை அழைத்தனர். அலுவலகத்தில் கோப்பு பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் ரங்கசாமி அங்கு வந்தார்.

    பச்சைக்கொடி வாங்கி பேருந்தை தொடக்கி வைக்கும் வகையில் அசைக்க முதல்வர் ரங்கசாமி தயாரானார். அப்போது முதல்வரின் மருமகனான பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அங்கு வந்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அமைச்சர் வர பத்து நிமிடங்கள் காலதாமதமானது. அதனால் டென்ஷனான முதல்வர் ரங்கசாமி அங்கிருந்து தனது அறைக்கு திரும்பினார்.

    பேரவை வளாகத்துக்கு அமைச்சர் நமச்சிவாயம் வந்தவுடன் அங்கு நடந்ததை சட்டக்கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் விளக்கினர். இதையடுத்து முதல்வர் அறைக்கு அமைச்சர் நமச்சிவாயம் சென்று சந்தித்தார். கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டிருந்த முதல்வர் சிறிது நேரத்துக்கு பிறகு சமாதானமடைந்து அங்கிருந்து வெளியே வந்து பேருந்தை தொடக்கி வைத்தார்.

    வழக்கமாக முதல்வர் ரங்கசாமிக்கு அனைவரும் காத்திருக்கும் சூழலில் தனது மருமகனால் அவர் காத்திருந்து டென்ஷனாகி அறைக்கு திரும்பியதும், அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் அழைத்து வந்ததையும் அங்கிருந்தோர் பார்த்தனர். இச்சம்பவம் அங்கு சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.

    லீனா மணிமேகலை மீது பாய்ந்த வழக்குகள்; உச்சநீதிமன்றம் விதித்த தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....