Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கு கீழ் இந்தியா; எத்தனாவது இடம் தெரியுமா?

    பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கு கீழ் இந்தியா; எத்தனாவது இடம் தெரியுமா?

    உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை கேலப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

    சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் கேலப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 

    உலையை பகுப்பாய்வு நிறுவனமான கிளப் சர்வே வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட்டியலில் தலிப்பான்களால் கைப்பற்ற ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறைந்த நாடாக கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடைசி இடத்தில் உள்ளது. 

     

    இந்தப்பட்டியலில் கிழக்கு ஆசியா மிகவும் பாதுக்காப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பாதுகாப்பான பகுதியாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பதம் பார்த்த காலாண்டு முடிவு! அதிர்ச்சியில் ஊழியர்கள்

    கிளப் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம், பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை த்டஓர்பாக நான்கு கேள்விகள் 120 மேற்பட்ட நாடுகளில் 1,27,000 நபர்களிடம் கேட்டகப்பட்டு அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இதன்படி, இந்த ஆண்டில் பாதுகாப்பில் குறைந்த நாடுகளாக கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ(58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளது.

    இந்த ஆண்டின் பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ்தான் (95), நார்வே (93), ஸ்விட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.

    இந்தப் பட்டியலில் இந்தியா 80 புள்ளிகளை பெற்றுள்ளது. இருப்பினும் பாதுகாப்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கீழாகவே இந்தியா உள்ளது. அதே சமயம் பிரிட்டன் மற்றும் வங்க தேசத்துக்கு மேல் இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ட்விட்டரை வாங்கிய அடுத்த கணமே இந்தியருக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்! முதல் நாளே இப்படியா ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....