Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

    ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வக்கீல் நோட்டீஸ்

    மதுபான கொள்முதல் விற்பனையில் கமிஷன் பெறுவதற்காக பேசியதற்காக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக்கோரி தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழக பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவியில் உள்ள நிர்மல்குமார் சமீபத்தில் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல் குறித்தும், அதன் விற்பனை பற்றியும் பேசியிருந்தார். மேலும் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றதாகவும், இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து, நிர்மல்குமாரின் அக்கருத்து எந்தவித ஆதாரம் இல்லாமல் இருக்கிறது என்றும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து நிர்மல் குமாருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்டான் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

    மேலும் சம்மந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஒரு வாரத்தில் செய்யவில்லை என்றால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பதிவுகளை நீக்க வேண்டும் என்று யூடியூப்  மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான், இலங்கைக்கு கீழ் இந்தியா; எத்தனாவது இடம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....