Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரியில்தான் முதல் ஜி20 மாநாடு; பெருமிதத்தில் முதல்வர்..

    புதுச்சேரியில்தான் முதல் ஜி20 மாநாடு; பெருமிதத்தில் முதல்வர்..

    புதுச்சேரியில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஜி20 நாடுகளின் ஆரம்பகட்ட மாநாடு நடைபெற உள்ளது.

    ஜி20 நாடுகளின் தலைமையை சமீபத்தில் இந்திய அரசு ஏற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டின் சின்னம் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சி புதுச்சேரி அரசு செய்தி கடற்கரைச் சாலை, காந்தி சதுக்கத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;

    புதுச்சேரியில் ஜி20 மாநாடு நடத்துவது என்பது பெருமையாக இருப்பதாகவும், ஒரு சிறிய மாநிலம், யூனியன் பிரதேசம், பழைமையான மாநிலம், தொன்மையான நகரம் என்று உலகம் முழுவதும் புதுச்சேரியை உற்றுப்பார்க்கின்ற நிலையில் ஜி20 நாடுகளின் மாநாட்டை புதுச்சேரியில் நடத்த பிரதமர் ஏற்பாடு செய்துள்ளதற்கு தனது மாநிலத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    உலகநாடுகளைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு வரும்போது புதுச்சேரியை பற்றி அறிந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். புதுச்சேரியில் பழமையான கட்டிடங்கள் பார்ப்பதற்கு கவரும் வகையில் உள்ளது, அதனால், தற்போது 176 கட்டிடங்களை பழமையான கட்டிடங்களாக அரசு அறிவித்துள்ளது. இது புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டவரை வெகுவாக கவரும்.

    இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

    இவரைத்தொடர்ந்து,  புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார். அவர் பேசிய போது, ஜி20 நாடுகளின் மாநாடு புதுச்சேரியில் நடக்க இருப்பது சிறப்பு என்றவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்த மாநாடு முதலில் வரும் ஜனவரி 31-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ளது பெருமைப்பட வேண்டியது என்றார்.

    மேலும், அவர் பேசியதாவது;

    புதுச்சேரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து முதல்வர் பெருமிதப்பட்டார், மேலும் ஜி20 நாடுகள் மாநாட்டின் சின்னத்தை காட்சிப்படுத்துதல் என்பதை பற்றி சொன்னார்கள். ஆக நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது இது போன்ற காட்சிப்படுத்தும் வாய்ப்புகள் எல்லாம் கட்டாயம் கிடைக்கும்.

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கெல்லாம் போகும்போது ஏன் வெளிநாடு போகின்றார் என விமர்சனம் செய்தார்கள். ஆனால் அவர் வெளிநாடு சென்றது, ஜி20 நாடுகளின் தலைமை நமக்கு கிடைத்திருப்பது என்பது உலகில் மிகப்பெரிய வாய்ப்பு.

    மேலும், எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதில் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவெடுக்க முடியாது என்ற பிரமாண்டமான ஒரு நிலையை மத்திய ஆட்சி இந்தியாவிற்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடியது.

    இவ்வாறு ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

    கழுத்தளவு குழியில் விவசாயி வித்தியாசமான போராட்டம்; எதற்கு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....