Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகழுத்தளவு குழியில் விவசாயி வித்தியாசமான போராட்டம்; எதற்கு தெரியுமா?

    கழுத்தளவு குழியில் விவசாயி வித்தியாசமான போராட்டம்; எதற்கு தெரியுமா?

    மராட்டிய மாநிலத்தில் விவசாயி ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தை நடத்தி வருகிறார். 

    மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் ஜாதவ் என்ற விவசாயி. இவருக்கு மாநில அரசு சார்பில் கர்மவீர் தாதாசாஹெப் கெய்க்வாட் சலிக்காரன் இஸ்வாபிமான் என்று அத்திட்டத்தின் கீழ் கடந்த 2019 ஆம் ஆண்டு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 

    இதற்காக விவசாயி சுனில் ஜாதவ் பல அரசு அலுவலகங்களுக்கு சென்று போராடி உள்ளார். இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக அவருக்கு வழங்குவதாக கூறிய நில ஆவணங்கள் மட்டும் கைக்கு கிடைக்கவில்லை. இதனால், மனம் உடைந்த விவசாயி ஒரு முடிவை எடுத்தார். 

    அரசுக்கு தனது எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அவரது கிராமத்தில் கழுத்தளவுக்கு குழி தோண்டி, அதில் தன்னைத்தானே புதைத்துக்கொண்டார். அவரது கழுத்து பகுதி மட்டும் பூமிக்கு வெளியே இருக்கிறது. 

    கிராம மக்களும் உறவினர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தை கைவிடும்படி கோரிக்கை வைத்தும் விடாப்பிடியாக தனது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். 

    விவசாயிகள் பலரும் அரசுக்கு எதிரான தங்களின் எதிர்ப்புகளை தெரிவிக்க வித்தியாசமான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ‘மேலாடையை அகற்றுங்கள்’ – பெங்களூர் விமான நிலையத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....