Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்புத்தாண்டு தினத்தில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட ரஷ்யா

    புத்தாண்டு தினத்தில் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததை ஒப்புக்கொண்ட ரஷ்யா

    இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் மட்டும் 89 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. 

    உக்ரைன்-ரஷ்யா போர் பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் டோடென்ஸ்க் நகரில் மகீவ்கா என்ற பகுதியில் ரஷ்ய ராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்போது அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தினத்தில் உக்ரைன் படைகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. 

    இந்தத் தாக்குதலில் ஹிமாஸ் வகை 6 ராக்கட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ராக்கெட்டுகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது ஆகும். 

    இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 300 ரஷ்ய வீரர்கள் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதனை ரஷ்யா மறுத்துள்ளது. மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 89 வீரர்கள் மட்டுமே உயிரிழந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களில் துணை தளபதி மட்டத்தில் ஒரு வீரர் உயிரிழந்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    எப்போதும் இதுபோன்ற வீரர்கள் உயிரிழப்பு விவரங்களை ஒப்புக்கொள்ளாத ரஷ்யா தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்- பாமக நிறுவனர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....