Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'மேலாடையை அகற்றுங்கள்' - பெங்களூர் விமான நிலையத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

    ‘மேலாடையை அகற்றுங்கள்’ – பெங்களூர் விமான நிலையத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

    பெங்களூர் விமான நிலையத்தில் மாணவியின் மேலாடையை அகற்ற சொல்லியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மாணவி ஒருவரை மேலாடையை கழற்றி சோதனை செய்து அம்மாணவியை அவமதித்துள்ளனர். 

    கொரோனா பெருந்தொற்று காரணமாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 ஆண்டுகளை சேர்ந்த சர்வதேச விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், கிரிஷானி காத்வி என்ற பெண் பயணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது தன்னுடைய சட்டையை கழற்றும்படி கேட்கப்பட்டதாகவும், ஒரு உள்ளாடையை மட்டுமே தான் அணிந்து கொண்டு அங்கு நின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது உண்மையாக தன்னை அவமதிப்புக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியதாகவும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து  ஒரு பெண் நிற்பது விரும்பத்தகாத ஒன்றும் எனவும், ஏன் ஒரு பெண்ணின் மேல் ஆடையை கழற்ற செய்ய வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். 

    இந்தப்பெண் ஒரு மாணவி என்றும் இசைக் கலைஞர் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்தச் சம்பவத்திற்கு பெங்களூரு விமான நிலையம் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் வேறொரு ட்விட்டர் பக்கத்தில் இருந்து பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

    இதனிடையே, கிரிஷானியின் இந்தப் பதிவு ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவரது ட்விட்டர் பக்கமே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

    போலியான வைரல் காணொளிகள்; இதுவும் போலியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....